www.womanofislam.com

Muslim women's online learning centre




தையல் தொழில் (Sewing)



பெரியளவு மூலதனம் இல்லாமல், பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்க கூடிய தொழில்களில் இதுவும் ஒன்று. இதற்கு தேவையானவை ஒன்று தையல் அறிவு மற்றது ஒரு தையல் இயந்திரம் (தையல் மெசின்), இவற்றோடு உதவி பொருட்களான நூல், ஊசி, பொத்தான், கத்தரிகோல், அளவு நாடா போன்றன.



இந்த தொழிலை இரண்டு விதமாக செய்யலாம்.



ஒன்று, முறைப்படி தையல் தொழில் கற்றுக்கொள்ளாமல், தையல் தொழிலோடு சம்பந்தப்பட்ட சில துணைத் தொழில்களை செய்து கொடுத்து சம்பாதிக்கலாம். அதாவது, தையல் தொழில் செய்யும் தெரிந்த பெண்கள், வீட்டுக்கு அருகில் உள்ள டெய்லரிங் கடை போன்றவற்றில் பேசி, பட்டன் தைத்தல், ஹெம்மிங் செய்தல், நூல் வெட்டி கொடுத்தல், எம்ப்ராய்டரி போன்ற துணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டு வாங்கி செய்து கொடுக்கலாம்.



இரண்டாவது முறை, தையல் தொழிலை முறைப்படி கற்றுக்கொண்டு, பின்னர் ஒரு தையல் மெஷின் வாங்கி, வீட்டில் வைத்து பக்கத்து வீட்டுபெண்கள், உறவுக்கார பெண்களின் ஆடைகளை கூலிக்கு தைத்து கொடுக்கலாம். சில எம்ப்ராய்டரி தெரிந்த பெண்களை வேலைக்கு வைத்து அவர்களின் மூலம் எம்ப்ராய்டரி (Embroidery) போன்ற வேலைகளையும் செய்யலாம். குறிப்பாக சாரி (Saree), சல்வார் (Shalwar), அபாயா (Abaya) போன்றவற்றுக்கு இப்போது நிறைய கிராக்கி உள்ளது.



அத்தோடு, வீட்டு ஜன்னல் திரைசீலை (கர்ட்டன்), மேசை விரிப்பு போன்ற பொதுவான பலவற்றை சிறப்பாக வடிவமைக்க முடிந்தால் அது ஒரு நல்ல தொழிலாகிவிடும்.



அதேபோல, இது சம்பந்தமான நூல்கள், இன்டர்நெட் பக்கங்களை வாசித்து புதிய புதிய ஆடை வடிவமைப்புகளை மேற்கொள்ளலாம். இதனால், பெண்கள் உங்களிடம் மிகவும் விரும்பி வருவார்கள்.



மேலும் தெரிந்த ஆடை விற்பனை கடைகளுடன் பேசி அவர்களுக்கு ஆடைகளை தைத்து கொடுத்து சம்பாதிக்கலாம்.



சிறியளவில் வீட்டில் வைத்து ஒரு தையல் மெசினோடு ஆரம்பித்து சிறிது சிறிதாக முன்னேற்றி பாரியளவில் இந்த தொழிலை செய்யலாம். அதற்கு, செய்யும் தொழிலில் நல்ல நுணுக்கமும் தொழில் தர்மமும் இருக்க வேண்டும்.