www.womanofislam.com

Muslim women's online learning centre




சமையல் வகுப்புகள் - Cookery Classes


கல்வி ஞானமில்லாவிட்டாலும் பல பெண்கள் நல்ல சமைக்க தெரிந்தவர்களாகவும் சமையல் கலையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பர். அத்தகைய பெண்கள் தம் திறமையை கொண்டு பயனடைய சிறந்த தொழில் முறைகளில் இதுவும் ஒன்று.



சமையலில் நீங்கள் கில்லாடியா? விதவிதமாக சுவை சுவையாக சமைக்க தெரிந்தவரா? உங்கள் திறமையை வீணடிக்காமல் அவற்றை கொண்டு ஹலாலான முறையில் சம்பாதியுங்கள்.



உங்கள் வீட்டிலேயே ஒரு சமையல் வகுப்பு ஒன்றை ஆரம்பியுங்கள். இன்றைய காலத்தில் பெண்கள் அதிகம் கல்வி மற்றும் தொழில் துறைகளில் ஈடுபடுவதால் பெரும்பாலானோருக்கு சரியாக சமைக்க தெரிவதில்லை. அவர்கள் அதிகம் சேர்ந்து விடுவார்கள். அடுத்து உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவிய ஆரம்பித்துவிடுவார்கள்.



அக்கம் பக்கத்து வீட்டு பெண்களுக்கும், நண்பிகளுக்கும், தெரிந்த பெண்களுக்கும் சிறியளவில் ஒரு அறிவிப்பு மட்டும் கொடுங்கள். முதலில் சிறிய கூட்டத்தோடு ஆரம்பித்து பின்னர் கூட்டம் அதிகம் சேர்ந்துவிடும்.



இந்த தொழிலில் ஈடுபடும்போது தேவையான ஒரு விடயம் புதுமை. அனைவருக்கும் தெரிந்த உணவு வகைகளையே எப்போதும் செய்யாமல் புது வகை அறுசுவை உணவு வகைகளை செய்யும்போது உங்கள் புகழ் மேலோங்கும். நல்ல கூட்டமும் வரும்.



புது வகையான உணவு வகைகளை கற்றுக்கொள்ள பல்வேறு இணையத்தளங்கள் உள்ளன. குறிப்பாக எமது www.womanofislam.com சமையல் பகுதில் நிறைய புது வகை உணவுகள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும் பல தளங்களும் உள்ளன. அவற்றை கொண்டு நீங்களும் உங்கள் சமையல் ஞானத்தை அதிகரித்து கொள்ளலாம்.