www.womanofislam.com

Muslim women's online learning centre




மணப்பெண் அலங்காரம் - Bridal Make up


பெரியளவு மூலதனம் இல்லாமல், பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்க கூடிய தொழில்களில் இதுவும் ஒன்று. இதற்கென கடை எடுத்து பியூட்டி பார்லர் போட்டு ஆரம்பிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் வீட்டில் இருந்தாவாறே செய்யலாம். மேலும் உங்கள் தெரிந்தவர்கள், நண்பிகள், உறவினர்கள் என பலருக்கு சொல்லி அவர்களுக்கு தேவைப்படும்போது அவர்களின் இடத்திலேயே செய்யலாம்.



நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ஒரு நல்ல முக அழகு கலை நிபுணரிடம் இந்த கலையை கற்றுக்கொள்வது. ஆறு மாதத்தில் நிறைவு பெறலாம் அல்லது ஒரு வருடமும் ஆகலாம். மேலும் இது சம்பந்தமான நூல்கள், இணையத்தளங்கள், பிளாக்குகள் (Blog) ஆகியவற்றை நிறைய வாசித்து மேலும் அறிவை வளர்த்து கொள்ளலாம்.



பின்பு அழகு கலைக்கு தேவையான தரமான அழகு சாதன பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். இது சம்பந்தமான ஆலோசனைகள் இணையத்தளங்களில் நிறையவே இருக்கின்றன. அப்படி வாங்கும்போது நல்ல ஒரு கடையில் வாங்கி அதன் நிரந்தர வாடிக்கையாளராக ஆகி கொள்ளுங்கள்.


மணப்பெண் முக அலங்காரம், மணப்பெண் சிகை அலங்காரம், மணப்பெண்ணுக்கு மருதாணி இடுதல், மணப்பெண் ஆடை உடுத்தல் போன்றவற்றை முறையாக கற்றுக் கொண்டால் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம்.


தற்கால உலகில் பெண்கள் ஆடை, அலங்காரம் சம்பந்தமான தொழில்கள் நிறைய இலாபம் சம்பாதிக்க உதவும் தொழில்களாக மாறியுள்ளன. இது நிறைய வாடிக்கையாளர்களை கொண்டு வரும். முதலில் நம் வீட்டு பெண்கள், நண்பிகள், பக்கத்து வீட்டு பெண்கள் என்று ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் மூலமாகவே வாடிக்கையாளர்களை பெற்று கொள்ளலாம்.


இந்த தொழிலில் ஈடுப்ப்படும்போது மிக முக்கியமான ஒன்று தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் ஒருவரிடம் கற்றோம் அது மட்டும் போதும் என்று நினைக்க கூடாது. அப்படி இருந்தால் கால மாற்றத்திற்கேற்ப உங்களால் தொழிலில் நிலைத்து நிற்க முடியாது. எனவே புதிய டிசைன்கள், புதிய தொழில் நுட்பங்களை இன்டர்நெட், நூல்கள் மூலம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.


இவ்வாறு வீட்டில் இருந்தவாறே சிறிது சிறிதாக ஆரம்பித்து, தொழிலில் அனுபவமும், நிரந்தர வாடிக்கையாளர்களும், நல்ல வருமானமும் அமையும்போது தொழிலை விருத்தி செய்து பாரியளவில் செய்யலாம்.