www.womanofislam.com

Muslim women's online learning centre

ஏன் கிழவிகள் சுவர்க்கம் செல்லம் மாட்டார்கள் ?


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஸஹாபாக்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு வயதான கிழவி ஒருவர் வந்து “யாரஸுலலல்லாஹ் நாங்கள் சொர்க்கம் செல்ல முடியுமா?” என்று கேட்டார்.


அந்த தள்ளாத வயது முதிர்ந்த அம்மையாரைப் பார்த்ததும் புன்முறுவல் பூத்து “கிழவிகள் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது” என்ற கருத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்தபடியே கூறினார்கள்.


அதனைக் கேட்டதும் அந்த வயதான அம்மையார் அழத்துவங்கி விட்டார்கள். ‘கிழவிகள் சுவர்க்கம் செல்ல முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களே கூறிவிட்டார்களே’ என்று மிகுந்த கவலையுடன் கண்களில் கண்ணீர் வழிய அழுதுகொண்டே திரும்பி சென்றார்.


சில எட்டுக்கள் எடுத்து வைத்ததும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அந்த அம்மையாரை அழைத்தார்கள். அன்னாரின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. ஏன் தன்னை அழைக்கிறார் என்ற கேள்விக் குறியோடு திரும்பி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் எதிரில் அந்த அம்மையார் வந்து நின்றார். ஸஹாபாக்களுக்கும் ஆச்சரியமாகி விட்டது. எதற்காக மீண்டும் அழைக்கிறார்கள் என்று அவர்களுக்கும் புரியாது விழித்தனர். அந்த நிலையில் புதிரின் ரகசியத்தை அன்னார் வெளியிட்டார்கள்.


“தாங்கள் தான் கிழவிகள் சுவர்க்கம் செல்லமாட்டார்கள் என்று சொல்லிவிட்டீர்களே, யா ரஸுலல்லாஹ்” என்று மீண்டும் அந்த வயதான அம்மையார் கூறினார்கள்.


அதனைக் கேட்டதும் “வயதான கிழவிகள் ஒரு போதும் சுவர்க்கத்திற்குள் நுழைய முடியாது. அவர்கள் அழகிய இளம் கன்னிப்பெண்களுடைய கோலத்தில்தான் சுவர்க்கத்திற்குள் நுழைவார்கள். எத்தகைய வயதுடைய பெண்ணாக இருப்பினும் அவர்கள் எல்லோரும் சுவர்க்கத்திற்குள் நுழையும் போது இளம்வயது பெண்களைப் போன்று இறைவன் ஆக்கிவிடுவான். எனவே தான் கிழவிகள் சொர்க்கத்திற்குள் செல்ல மாட்டார்கள் என்று சொன்னேன்” என்ற கருத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்தபடியே கூறிய பொழுது அந்த கிழவியும் மகிழ்ந்து போனார்கள்.


கூடியிருந்த ஸஹாபாக்களும் சிரித்து விட்டனர். முகம் மலர்ந்து, மகிழ்வோடு சிரித்துக் கொண்டே செல்லும் அந்த கிழவியைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்.


இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே

தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்

சிந்திய உணவு 

பொறுமையில் முன்மாதிரி