www.womanofislam.com

Muslim women's online learning centre

இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹும்) வாழ்வினில் நடந்த சுவையான சம்பவம்

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய அன்பு மகளார் ஹஸ்ரத் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் அன்புச் செல்வங்கள் தான் இமாம் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும், இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுமாவார்கள். இமாம் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய முகச்சாயல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களையே ஒத்திருக்கும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய மார்பு வரையுள்ள சாயல் இமாம் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடத்திலும், மார்புக்கு கீழே இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடத்திலும் இருந்ததாக ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படுகிறது.


‘ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் சுவனத்து இளைஞர்களின் தலைவராவார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:- அபூ ஸஈதில் குத்ரி

ஆதாரம்:- புகாரீ, முஸ்லிம்


அத்தகைய சிறப்புப் பெற்ற நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய பேரர்களாகிய ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு), ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இருவரும் தமாஷாக குஸ்தி போட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றும் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களும் இருந்தனர். பேரப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்துக் கொள்வதைக் கண்டு சந்தோஷ மிகுதியால், “ஹஸனே! விடாதே நல்லா பிடியுங்கள்” என்று ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை ஆதரித்துத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.


ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) வை ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரம் பொறுத்து பார்த்தார்கள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா). ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) யை ஆதரிப்பதாகக் காணோம். மீண்டும் மீண்டும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையே ஆதரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.


இதனைக் கண்ட பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுடைய உள்ளம் சற்று கவலை கொண்டது. “பேரப் பிள்ளைகள் இருவர் இருக்க ஹஸனை மட்டுமே ஆதரிக்கிறீர்களே, ஹுஸைனை விட்டு விட்டீர்களே” என்று கேட்கக் கூடாது என்று இருந்தார்கள். எனினும் பெற்ற பிள்ளை பாசத்தினால் தந்தையிடம் வாய் திறந்து “இது நியாயமா?” என்று கேட்டு விட்டார்கள்.


அதனைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மனம் கவலைப்படவில்லை. மாறாக புன்னகை பூத்தபடியே ‘அதோ! ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ஹுஸைனை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் நான் ஹஸனை ஆதரித்தேன்” என்றார்கள்.


சுவர்க்கத்து பெண்களின் தலைவி பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் இதனைக் கேட்டதும் மேனி புல்லரித்து விட்டது. கண்களில் கண்ணீரும் வந்து விட்டது. புரியாத புதிருக்கு விடை பகர்ந்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தன் அன்பு மகளை அரவணைத்துக் கொண்டார்கள். ஸுப்ஹானல்லாஹ்!!






இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்

சிந்திய உணவு

பொறுமையில்

முன்மாதிரி