www.womanofislam.com

Muslim women's online learning centre

ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா கண்ட கனவு



ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு கனவு கண்டார்கள்.

அது நான்கு நடசத்திரங்கள் அவர்களின் இல்லத்தினுள் வந்து விழுந்தன. அது பற்றி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "அதை உங்கள் வாழ்நாளில் அறிந்துக் கொள்வீர்கள்." என்றார்கள்.


​​பின்னாளில் மூன்று நட்சத்திரங்கள் அண்ணலெம் கோமான் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஸையதுனா அபூபக்ர், ஸையிதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தினுள்ளேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். நான்காவது நடசத்திரமான ஸையிதுனா ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஓர் இடம் அவ்வில்லத்தினுள் ஒதுக்கப்பட்டுள்ளது.


​​ஹஸ்ரத் ஸையிதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு தன் ஜீவியத்தின் போதும் மரணவேளையின் போதும் தான் தன் நேசர்கள் அருகே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அனுமதியை ஸையிததினா ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கோரியிருந்தார்கள். அனுமதி தரப்பட்டிருந்தும் தன் மரணத்தின் பின் மீண்டும் அனுமதி கேட்கும்படி தன் மகனாரிடம் கூறி இருந்தார்கள்.


​​ஸையிதுனா அலி ரலியல்லாஹு அன்ஹு மண்ணறைக்குள் இறங்கி ஸையிதுனா உமர் ரலியல்லாஹு அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு வெளியேறும் போது, "ஸதக்த யா ரஸூலல்லாஹ்... ஸதக்த யா ரஸூலல்லாஹ்" என்று ஆச்சரியம் பொங்கக் கூறிக் கொண்டே வெளியேறினார்கள்.


​யாவரும் ஆவலோடு அவர்களிடம் காரணம் கேட்டார்கள். ஸையிதுனா அலி ரலியல்லாஹு அன்ஹு, "பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் நாளை நீதி தீர்ப்பு நாளின் போது நானே முதலாவதாக எழுப்பப்படுவேன். என் வலது புறத்தில் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு), என் இடது புறத்தில் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) எழுப்பப்படுவார்கள் என்றுக் கூறினார்கள். இதோ அது நடந்தேறி விட்டது." என்று ஆச்சரியம் பொங்கக் கூறினார்கள்.


​ஸுப்ஹானல்லாஹ்!! ஆயிஷா நாயகி கண்ட கனவு அப்படியே நடந்தது.


​ஆக்கம் - Abdur Raheem Muhammad Jaufer







இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே

தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்

பொறுமையில் முன்மாதிரி 

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்