www.womanofislam.com

Muslim women's online learning centre

ரமலானை கண்ணியப்படுத்துங்கள்

நெருப்பு வணக்கவாளரான மஜூஸி ஒருவர் இருந்தார் அவருக்கு மகன் ஒருவன் இருந்தான். அது ரமலான் மாதம், அவருடைய மகன் ஒருநாள் முஸ்லிம்கள் நோன்பு நோற்றிருந்த இடத்தில் அமர்ந்து எதையோ தின்றுக்கொண்டிருந்தான்.



அதைக் கண்ணுற்ற அவர் சினமுற்று, “இது முஸ்லிம்களுக்கு புனித மாதம். அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள். அவ்வாறிருக்க அவர்களருகில் சென்று சாப்பிடுகின்றாயே?” என்று கூறி அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார்.



அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து அவர் இறந்து விட்டார். அன்றிரவு அவ்வூரிலுள்ள ஓர் ஆலிமின் கனவில் அவர் தோன்றினார். அவர் சுவனத்தில் நல்ல நிலையில் இருப்பது கண்ட ஆலிம், “நீர் தீ வணக்கவாளராயிற்றே! நீர் சுவனம் சேர்ந்தது எவ்வாறு?” என்று வினவ,




அதற்கவர் “நான் நெருப்பை வணங்குபவன் தான் ஆனால்  ரமலானை கண்ணியப்படுத்தியதன் விளைவாக நான் இறப்பதற்கு முன்னரே அல்லாஹ் என்னை இஸ்லாத்தில் இணைத்து அருள் புரிந்தான். என்னை இறைநம்பிக்கையாளராக ஏற்று கொண்டான். அதனால் இன்று நான் சுவனத்தில் இருக்கிறேன்.” என்று விடை பகர்ந்தார்.



பாருங்கள் ரமளானின் சிறப்பை! முஸ்லிம் அல்லாதவர்கள் உணர்ந்திருந்த அளவிற்குக்குக் கூட முஸ்லிம்களில் பெரும்பாலோர் ரமலானின் சிறப்பை அறிந்திருக்கவில்லை, நோன்பாளியின் முன் உண்பது, குடிப்பது, அசிங்கமாகப் பேசுவது, அவமரியாதையாக நடந்து கொள்வது போன்றவற்றை முஸ்லிம்களுள் சிலர் செய்து வருகின்றனர். அதுமட்டும் அல்ல இரவு நேரங்களில் மாற்று மதத்தவர்களுக்கு இடையூறாக வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தொல்லை கொடுக்கின்றார்கள்.


அவர்களுக்கெல்லாம் அல்லாஹ் ஹிதாயத் என்னும் நேர்வழியைக் காட்டி ரமலானை கண்ணியப்படுத்தி, இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு செயலாற்றும் நற்பேறுடையவர்களாக ஆக்கி அருள் புரிவானாக!






இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே

தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்

சிந்திய உணவு 

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்