www.womanofislam.com

Muslim women's online learning centre

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்


இஸ்லாம் மார்க்கம் ஐந்து கடமைகளை ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடைமையாக்கி உள்ளது. அவற்றில் சில அனைவரும் செய்தல் வேண்டும், இன்னும் சில ஒரு குறிப்பிட்ட சாரார் மீது கடமையாக்கி உள்ளது. அதாவது, யாரேனும் ஒரு முஸ்லிம் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்போது அவை அவர் மீது கடமையாகி விடுகிறது.


இஸ்லாத்தின் அந்த ஐந்து தூண்களும் பின்வருமாறு :


1. கலிமா / ஈமான் (இறை நம்பிக்கை)

2. தொழுகை

3. நோன்பு

4. ஸக்காத்

5. ஹஜ்


1. ஈமான் / கலிமா

ஈமான் (இறைநம்பிக்கை) என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். ஒருவரை முஸ்லிமா இல்லையா என்பதை  தீர்மானிக்கும் அடிப்படை காரணியாகும். அதாவது ஒருவர் இறைநம்பிக்கை கொள்ளும்போது அவர் முஸ்லிமாக மாறுகிறார். இறை நம்பிக்கை இன்றி செய்யும் எந்த நல்ல வணக்கங்களும் இறைவனால ஏற்றுக்கொள்ளப்டுவதில்லை.


ஒவ்வொரு முஸ்லிமும் ஆறு விடயங்களை ஈமான் கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை நிராகரித்தாலும் அவர் முஸ்லிமாக கருதப்பட மாட்டார்.


அவற்றை பற்றி தெளிவாக கற்க கீழே உள்ள "நம்பிக்கை (ஈமான்) கொள்ளவேண்டிய ஆறு விடயங்கள்" என்ற பக்கத்திற்கு செல்லுங்கள்.


கலிமா என்பது இறைநம்பிக்கையை உறுதி செய்து கூறப்படும் வார்த்தைகளாகும். இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் சொல்லப்பட்டு உள்ளன.


1. கலிமா தையிபா

லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்


அர்த்தம் : வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வையன்றி யாரும் இல்லை. முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்


2. கலிமா ஷஹாதா

அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு


அர்த்தம் : வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வையன்றி யாரும் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். மேலும் அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எதுவும் இல்லை என்றும், முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் நல்லடியாரும் திருத்தூதரும்ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்


3. கலிமா தம்ஜீத்

சுபானல்லாஹி வல் ஹம்துலில்லாஹி வ லாயிலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி அலிய்யில் அழீம்


அர்த்தம் : அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வையன்றி யாரும் இல்லை. அல்லாஹ் மிக பெரியவன்.  மகத்தான அல்லாஹ்வையன்றி யாருக்கும் எவ்வித சக்தியும் கிடையாது.


4. கலிமா தௌஹீத்

லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு. லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்த், யுஹ்யி வ யுமீத் பியதில் க்ஹைர் வ ஹுவ அலா குல்லி ஷைஹின் கதீர்.


அர்த்தம் : வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வையன்றி யாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எதுவும் இல்லை. அவனுக்கே அரசாட்சி சொந்தம். அவனுக்கே சர்வ புகழும். அவனே உயிரளிப்பவன், மரணிக்கச்செய்பவன். எல்லா நலவுகளும் அவன் கைவசமே உள்ளது. அவன் சர்வ சக்தன்.


5. கலிமா ரத்துல் குப்ர்

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அன் உஷ்ரிக்க பிக்க ஷை அன் வ அன அஃலமு பிஹி வ அஸ்தக்பிருக்க லிம லா அஃலமு பிஹ். துப்து அன்ஹு வ தபர்ராத்து மினல் குப்ரி வஷ் ஷிர்க்கி வல் கிஸ்பி வல் மஃஸி குல்லிஹா அஸ்லம்து வ' ஆமன்து வ அகூலு லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதர் ரசூலுல்லாஹ்


அர்த்தம் :  நிச்சயமாக அல்லாஹ்விடம் அவனுக்கு நான் இணை வைப்பதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். நான் அறியாமல் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பு தேடுகின்றேன். இறை நிராகரிப்பை விட்டும் அவனுக்கு இணை வைப்பதை விட்டும், பொய் சொல்வதை விட்டும், எல்லா பாவங்களை விட்டும் நீங்குகிறேன் என்று உறுதி அளிக்கிறேன். வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வையன்றி யாரும் இல்லை.  முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் என்று சாட்சி கூறுகிறேன்.



2. தொழுகை

​​ஐந்து நேரம் தொழுவதுஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். தொழுகை என்பது ஒரு அடியான் தான் இறைவனுடன் செய்யும் சம்பாஷனையாகும். தொழுகை இறைவனுக்கு நன்றி செலுத்தி செய்யப்படும் ஒரு வணக்கமாகும். இஸ்லாத்தின் அடிப்படையில் ஒருவர் தொழுதால் அவருக்கு இறைவனிடமிருந்து நன்மைகள் கிடைக்கும். ஒருவர் தொழுகையை விட்டால் இறை தண்டனை கிடைக்கும்.


ஐந்து நேர தொலுகைகளாவன:

1. பஜ்ர் விடிகாலை தொழுகை 2 ரக்அத்

2. லுஹர் — நண்பகல் தொழுகை 4 ரக்அத்

3. அஸ்ர்பிற்பகல் தொழுகை 4 ரக்அத்

4. மஃரிப்மாலை நேர தொழுகை 3 ரக்அத்

5. இஷா — இரவுநேர தொழுகை 4 ரக்அத்


ஜூம்ஆ (வெள்ளிக்கிழமை தொழுகை) 2 ரக்அத் தொழுகை. இந்த தொழுகை வெள்ளிக்கிழமை அன்று லுஹர் தொழுகை நேரத்தில் தொழ வேண்டும். அதே நேரம் பெண்கள் வீடுகளில் லுஹர் தொழுகை 4 ரக்அத் தொழ வேண்டும்.

இந்த தொழுகைகளை தவிர மேலதிக தொழுகைகள் காணப்படுகின்றன அதற்கு நபில்அல்லது  ஸுன்னத் என்று சொல்லப்படும். இந்த  மேலதிக தொழுகைகள் அல்லாஹ்வுடைய, ரஸுளுடைய அன்பைப் பெற துணைபுரியும்.



3. நோன்பு

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு வயது வந்த ஆண், பெண் முஸ்லிமின் மீதும் கடமையாகும். அதாவது, சூரிய உதயத்தில் இருந்து சூரிய மறைவு வரை எதுவும் உண்ணாமலும் குடிக்காமலும் உடலுறவு கொள்ளாமலும் நோன்பை முறிக்க கூடிய எந்தவொரு காரியத்தை செய்யமாலும் இருப்பதாகும்.



4. ஸகாத்

ஸகாத் என்பது செல்வம் படைத்தவர்கள் தமது செல்வத்தில் குறிப்பட்ட ஒரு வீதத்தை முறைப்படி கணக்கிட்டு ஏழை எளியவர்களுக்கு தர்மமாக கொடுப்பதை குறிக்கும். ஸகாத் எல்லோரின் மீதும் கடமை அல்ல. இஸ்லாமிய சட்டத்தில் குறிப்பிட்டப்படி, குறித்த அளவை விட ஒருவர் செல்வம் படைத்திருக்கும்போது அவரின் மீது ஸகாத் கடமையாகிறது.



5. ஹஜ்

ஹஜ் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் என்பது சவுதி அரேபியாவிலுள்ள புனித மக்கமா நகரத்தை நோக்கி துல்ஹஜ் மாதத்தில் புனித யாத்திரை மேற்கொள்வதாகும். இதுவும் எல்லோர் மீதும் கடமை இல்லை. ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு தேவையான உடல் மற்றும் பொருளாதார வசதி படைத்தவர்கள் மீது மட்டுமே இது கடமையாகும். வாழ்வில் ஒரு தடவையேனும் இக்கடமையை நிறைவேற்றுவது வசதி படைத்தவர்கள் மீது கட்டாய கடமையாகும். வசதி படைத்தும் ஒருவர் இக்கடமையை நிறைவேற்றவில்லை எனில் அவர் குற்றவாளி ஆவார்.