www.womanofislam.com

Muslim women's online learning centre

சமூகத்தை சீரழிக்கும் சினிமா


​​​இன்று குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை, குட்டிகள் முதல் கிழவிகள் வரை அடிமை பட்டு கிடக்கும் விஷயம் சினிமா. இந்த சினிமா எனும் மாயையில் நம் முஸ்லிம் சமூகம் அடிமைப்பட்டு சீரழிவதை மிகவும் அதிகமாக காணலாம். அதிலும் நம் பெண்கள் 24 மணித்தியாலமும் T.V, சினிமா, நாடகம் என்பதிலேயே காலத்தையும், நேரத்தையும் கழிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.

தாயின் மடியே குழந்தையின் முதல் பள்ளிகூடம் என்பார்கள். ஆனால் இன்றோ அது பள்ளிக்கூடம் என்பதை விட சினிமா கூத்து கூடம் என்று சொல்லும் அளவுக்கு நம் இஸ்லாமிய தாய்மார்கள் எப்போதும் தவம் கிடக்கும் இடமாக T.V யும் சினிமாவும் ஆகிவிட்டது.


​​அல்லாஹ்வை பற்றியும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை பற்றியும் பேச வேண்டிய பள்ளிக்கூடங்கள் இன்று பணத்துக்காக கூத்து போடும் சினிமா நடிக, நடிகைகளை பற்றிய பேச்சில் குடும்பத்தை ஓட்டி கொண்டுள்ளது. இந்த நிலையில் வளரும் இஸ்லாமிய குழந்தைகளிடம் எங்கே மார்க்கம், ஒழுக்கம், பண்புகளை எதிர்பார்ப்பது?


தாய்மார்களின் நிலை அப்படி என்றால் இளம் பெண்களின் நிலை? அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும். 24 மணித்தியாலமும் சினிமா, பாட்டு, கூத்து, நாடகம். இதை தவிர நண்பர்களோடு பேஸ்புக்கில் அரட்டை. எதை பற்றி? அங்கும் சினிமாதான். யாரவது ஒருவர் போடும் சினிமா நடிகனின் போட்டோக்கு கமெண்ட் (COMMENT) பண்ணுவதும், அதை மற்றவருடன் (SHARE) பகிர்ந்து கொள்வதும் என ஒரே கலாட்டா.


இன்னொரு படி கீழே இறங்கி, தான் ஒரு முஸ்லிம் பெண் என்ற வெட்கம் கூட இல்லாமல் அந்த சினிமா நடிகனின் போட்டோவிலே, “அவர் ரொம்ப அழகா இருக்கார் என்றும் அவரை ரொம்ப பிடிக்கும் என்று” கமெண்ட் வேறு.


இன்னும் சில குமரிகளின் நிலையோ மிக வேதனைக்குரியது. சினிமா மோகத்தில் ஏதாவது ஒரு நடிகையின் விசிறியாக ஆகி அந்த காபிரான நடிகை போல் ஆடை அணிவதும், அலங்காரம் பண்ணுவதுமாக தன் காலத்தை கழிக்கும் அவல நிலை.

​​

மார்க்கத்தை கற்று கொள்ளும் ஆசை துளி அளவும் இல்லை. சொல்லி கொடுத்தாலும் ஏற்க மறுக்கும் அலட்சிய போக்கு. பேஸ்புக்கில் சினிமா பற்றி போடும் படத்துக்கு லைக் (LIKE) செய்ய, கமெண்ட் (COMMENT) செய்ய மனசு வரும். அல்லாஹ்வை பற்றியும் ரசூலை பற்றியும் போட்டால் ஏறிட்டும் பார்ப்பதில்லை.

​​

இவர்கள் எங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள்? பெற்றோர்களே! உங்களின் குழந்தை வளர்ப்பு பற்றி நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களா? இன்னும் தாமதிக்க வேண்டாம். சினிமா பைத்தியங்களாக இருக்கும் அவர்கள் அதன் வெறியர்களாக ஆக முன் உங்கள் குழந்தையின் உள்ளங்களை அல்லாஹ்வினதும் ரசூலினதும் பைத்தியங்களாக அதாவது வலியுல்லாஹ்களாகவும் ஆஸிகே ரசூல்களாகவும் மாற்றி விடுங்கள்.


அதற்கு ஏற்றாற் போல முதலில் தாய்மார்களான நீங்கள் மாறுங்கள். பின்னர் உங்கள் மகளுக்கு சொல்லி கொடுங்கள். அற்பமான இந்த உலக மாயையில் நீங்களும் சிக்கி உங்கள் பெண் பிள்ளைகளும் சிக்கி ஈருலகிலும் கேவலப்பட வேண்டாம்.

​​

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.