www.womanofislam.com

Muslim women's online learning centre

வெஜிடபுள் சப்பாத்தி


தேவையான பொருட்கள்:-


​• கோதுமை மாவு - 2 கப்

• பெரிய வெங்காயம் - ஒன்று

• முள்ளங்கி - ஒன்று

• காரட் - ஒன்று

• குடைமிளகாய் - பாதி

• உருளைக்கிழங்கு - 3

• உப்பு - அரை தேக்கரண்டி





செய்முறை:

முள்ளங்கி, காரட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும்.


​​வெங்காயம், குடை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் வெங்காயம், முள்ளங்கி, காரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவிலிருந்து ஒரு உருண்டை மாவை எடுத்து கட்டையில் வைத்து சப்பாத்தியாக இடவும்.


​​அதில் செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும்.

தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் தடவி வெந்ததும் எடுக்கவும்.


​​சுவையான வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி. இதை மாலை நேர சிற்றுண்டியாக ஸோஸுடன் பரிமாறலாம்.