www.womanofislam.com

Muslim women's online learning centre

வெஜ்  பிரியாணி


தேவையான பொருட்கள்:-


சீரக சம்பா பச்சை - 400 கிராம், (தண்ணீரில் ஊறவைக்கவும்)

காய்கறிகள் - பிடித்தமானது - 400 கிராம் (கட் செய்து வைக்கவும்)

எண்ணெய் - 100 மில்லி, நெய் - 25 மில்லி, வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 200 கிராம்,மல்லி புதினா - கை பிடியளவு, பச்சை மிளகாய் - 4 , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன், சில்லி பவுடர் - முக்கால் ஸ்பூன், மஞ்ச்ள் பொடி - கால்ஸ்பூன் , கரம்மசாலா - அரைஸ்பூன், சோம்பு பொடி- கால்ஸ்பூன், பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது, உப்பு -தேவைக்கு.






செய்முறை:


பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் , நெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை , வெங்காயம் சிவற வதக்கி, இஞ்சி பூண்டு , கரம் மசாலா (ஏலம் பட்டை,கிராம்பு தூள்) சேர்த்து சிம்மில் வைத்து வதக்கி, மிளகாய், மல்லி இலை, புதினா சேக்கவும்.


நல்ல மணம் வந்ததும் தக்காளி, உப்பு,மிளகாய்த்துள், மஞ்சள் தூள் வதக்கி எண்ணெய் மேல் வந்ததும் காய்கறிகளை சேர்க்கவும.


காய்கறிகள் வெந்தபிறகு ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும். சிறிது நேரம் சிம்மில் வைக்கவும். உப்பை சரி பார்க்கவும், முடிந்தவரை மூடி வைத்தே சமைக்கவும்.


காய்கறி திக் கிரேவி பதத்தில் இருப்பது போல் வைக்கவும். பக்குவமாக முக்கால் பதத்தில் அளவாக உப்பு போட்டு வேக வைத்த ரைஸை வடித்து வைக்கவும். சூடாக இருக்கும் பொழுதே வடித்த ரைஸை பிரியாணிக்கு ரெடி செய்த காய்கறி மசாலாவில் கொட்டவும்.


விரும்பினால் சிவற பொரித்த வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன் தூவவும், மல்லி இலை சேர்க்கவும், லெமன் எல்லோ அல்லது சஃப்ரான் கரைத்து ஊற்றவும், ஆரஞ்ச் ரெட் கலரும் சிறிது கரைத்து மேலே ஊற்றவும்.


அதனை மேலோட்டமாக பிரட்டி விடவும். அகப்பையின் கம்பை கொண்டு ரைஸின் மேல் இருந்து கிரேவி (கீழ்) வரை 3 இடங்களில் துளை (குத்தி) இடவும். கிரேவியில் உள்ள ஜூஸ் மேல் எழுப்பி வர வசதியாக இருக்கும்.


அலுமினியம் ஃபாயில் போட்டு அல்லது வெறுமனே மூடி கொண்டு மூடவும், மேல் வெயிட்டுக்கு வடித்த கஞ்சியை சூடாக வைக்கவும்.


தீயை சிம்மில் வைத்து பழைய தோசைக்கல்லை பிரியாணி பாத்திரத்தின் அடியில் வைக்கவும், கனமான பாத்திரமாக இருந்தால் தேவையில்லை. அடி பிடிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு.


20 நிமிடம் சிம்மில் வைக்கவும்.பின்பு கவனமாக திறக்கவும். காய்கறி கிரேவி கீழ் ட்ரையாக இருக்கும், மேலே ஜூஸி பிரியாணி ரைஸ் இருக்கும்.


ரைஸை ஒரு போல் காய்கறி மிக்ஸ் ஆவது போல் பிரட்டி விடவும். உதிரி உதிரியாக சாஃப்டாக அருமையாக கமகமன்னு இருக்கும்.


சுவையான வெஜ் பிரியாணி ரெடி.