www.womanofislam.com

Muslim women's online learning centre

உளுந்து அடை



தேவையான பொருட்கள்:-

உளுந்து - கால் ட‌ம்ள‌ர்

அரிசி மாவு - மூன்று தேக்க‌ர‌ண்டி

ர‌வை - ஒரு மேசை க‌ர‌ண்டி

வெங்காய‌ம் - மூன்று

ப‌ச்ச‌மிள‌காய் - ஒன்று

கொத்தமல்லி தழை - சிறிது

நெய் + எண்ணை - சுட தேவையான அளவு




​​செய்முறை:

உளுந்தை அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்து சிறிது த‌ண்ணீர் சேர்த்து விழுதாக‌ அரைத்து கொள்ள‌வும்.


வெங்காயம், பச்சமிளகாய், கொத்தமல்லி இலை இவைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.​


அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, ரவை சேர்த்து கலக்கி கொள்ளவும்.


அதில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை, பச்சமிளகாயை சேர்த்து கொள்ளவும்.


கொஞ்ச, கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். 


அடை சுட தகுந்தவாறு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.


வாணலியில் என்னை விட்டு காய்ந்ததும்,  அடைகளாக வார்க்கவும்.