www.womanofislam.com

Muslim women's online learning centre

சேமியா கேசரி


தேவையான பொருட்கள்:-

சேமியா - கால் கிலோ

நெய், சீனி – தேவைக்கேற்ப

பாதாம், முந்திரி, திராட்சை - தலா 5

ஏலம், கிராம்பு - தலா 3

பட்டை – ஒன்று

பால், தண்ணீர் - அரை கப்

பன்னீர் (ரோஸ் வாட்டர்) - அரை மூடி

உப்பு - சிறிதளவு

கேசரி பவுடர் - சிறிதளவு




செய்முறை


முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


​​ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும் பாதாம், முந்திரி, திராட்சை சேர்க்க வேண்டும்.


வறுப்பட்டதும் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.


பால், தண்ணீர், சிறிதளவு உப்பு, கேசரி பவுடர் அனைத்தையும் கலந்து வைத்துக் கொண்டு சேமியா வறுப்பட்டதும் அதில் ஊற்றிவிட வேண்டும்.


சேமியா நன்கு வெந்ததும் தேவையான அளவு சீனி சேர்த்து கிளற வேண்டும்.


சுருண்டு வரும் போது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளற வேண்டும்.


இறுதியாக பன்னீர் சேர்த்து இறக்க வேண்டும்.