www.womanofislam.com

Muslim women's online learning centre

சீனி  சம்பல்


தேவையான பொருட்கள்


வெங்காயம் - 3 பெரியது

பச்சை மிளகாய் - 3

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

சீனி - 1தேக்கரண்டி

புளிக்கரைசல் - 1 கப்

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

வினாகிரி - 1 மேசைக்கரண்டி

மாசிதூள் - விரும்பினால் 1 மேசைக்கரண்டி

ஏலம், பட்டை, ரம்பை


செய்முறை


வெங்காயம், பச்சை மிளகாயை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டவும்.


ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் ஏலம், பட்டை, ரம்பை இவைகளை போட்டு தாளித்து,


வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி மூடி அவிய விடவும்.


வெங்காயம் நன்கு அவித்து வதங்கி பிரவுண் நிறமானதும் அதனுள் மாசிதூள், வினாகிரி, மிளகாய் தூள், புளிக்கரைசலை சேர்த்து கிளறவும்.


கலவை நன்கு வற்றி ஓரளவு சுருண்டதும் சீனியை சேர்த்து கிளறி இறக்கவும்.


இதனை அனைத்து வகையான உணவுகளுடனும் பக்க உணவாக உண்ணலாம்.


வெங்காயத்தை வதக்கும் போது இடையிடையே அடிப்பிடிக்காது கிளறி விடவும்.


புளிக்கரைசலிற்குப் பதிலாக வினிகரை மட்டும்  சேர்க்கலாம்.


இதனை சூடு ஆறியதும் ஒரு சுத்தமான காய்ந்த பாட்டிலில் போட்டு தேவையான போது எடுத்துக் கொள்ளலாம்.


ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும். அவ்வாறு எடுக்கும் போது சுத்தமான காய்ந்த கரண்டியை உபயோகிக்கவும்.