www.womanofislam.com

Muslim women's online learning centre

மெதுவடை


​​​தேவையான பொருட்கள்:-


உளுத்தம்பருப்பு - 1 கப்

வடித்த சாதம் - 1 கைப்பிடி

பச்சை மிளகாய் – 2

இஞ்சி - 1 துண்டு

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது

உப்பு – ருசிக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு




செய்முறை:


உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.


​​பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள்.


​​பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள்.


​​நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள்.


பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள்.


​​கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள்.


​​உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள்.


​​பஞ்சு போன்ற மெதுவடை தயார்.