www.womanofislam.com

Muslim women's online learning centre

மீன் பிரியாணி


தேவையான பொருட்கள்:-


ஜீலா மீன் - 20-24 துண்டுகள், பாசுமதி அரிசி - ஒன்னரை கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 8 டீஸ்பூன் குவியலாக, வெங்காயம் - அரைக்கிலோ, தக்காளி - அரைக்கிலோ, மல்லி,புதினா -தலா ஒரு கப், பச்சை மிளகாய் -8 பெரிய எலுமிச்சை -1 மிளகாய்த்தூள் -1+1டேபிள்ஸ்பூன், கரம் மசாலா -2டீஸ்பூன், மல்லித்தூள் - 4டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1டீஸ்பூன்(மீனில் கழுவ) சீரகத்தூள் - 1டீஸ்பூன், சோம்புத்தூள் -அரைடீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், தயிர் - 200மில்லி, எண்ணெய் - 250மில்லி, நெய் -100மில்லி,


எண்ணெய் மீன் பொரிக்க -100மில்லி, பின்ச் ரெட் யெல்லோ கலர், உப்பு -தேவைக்கு.





செய்முறை:


நறுக்க வேண்டியவைகளை தயார் செய்து வைக்கவும், அரிசியை கழைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். மீனை நன்கு கழுவி, மஞ்சள் தூள், உப்பு போட்டு பிரட்டி சிறிது நேரம் வைத்து ,மீண்டும் தண்ணீர் விட்டு கழுவி சுத்தமாக தண்ணீர் வடிகட்டவும்.


மீன் பொரிக்க மசாலா ரெடி செய்யவும், மிளகாயத்தூள் 1டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 2டீஸ்பூன், லைம் ஜூஸ், பின்ச் கலர், தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.


ரெடி செய்த மசாலாவை கையால் எடுத்து லேசாக ஒவ்வொரு துண்டாக தடவி வைக்கவும்.


பின்பு கொஞ்சமாக எண்ணெய் விட்டு முறுக பொரித்து எடுக்கவும்.


பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு நன்கு காயவும், புதினா இலையை போட்டு வெடிக்க விடவும்.


அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும், சிறிது உப்பு சேர்க்கவும், வதங்க விடவும்.


நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய் சேர்க்கவும்.


எல்லாம் சேர்ந்து வதங்கியதும்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.பிரட்டி சிறிது மூடவும்.


கரம் மசாலா, மல்லி,சீரக, சோம்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்,பிரட்டி விடவும்.


தயிர் சேர்க்கவும், நன்கு பிரட்டி சிறிது மூடவும்.


இப்படி பிரியாணி மசாலா கூட்டு போல் ஆகும்.


ஊற வைத்த அரிசியை தாராளமாய் தண்ணீர், நறுக்கிய மல்லி இலை ,உப்பு சேர்த்து, முக்கால் பதமாக சாதம் வெந்து வடிகட்டி வைக்கவும்.


பிரியாணி மசாலாவில், பொரித்த மீன் தூண்டுகளை பாதி வைத்து,முக்கால் பதமாக வெந்த சாதத்தை பாதி பரப்பி விடவும்,மீண்டும் மீதியுள்ள மீன் தூண்டுகளை பரத்தி வைத்து மீதி சாதத்தையும் மீன் மேல் போடவும்.


பரத்தி விட்டு பின்ச் ரெட் கலர் கரைசல், சஃப்ரான் அல்லது பின்ச் யெல்லொ கலர் கரைசல் தெளிக்கவும்.அலுமினியம் ஃபாயில் போட்டு மூடியால் மூடவும்,சும்மாவும் மூடலாம்.


வடித்த கஞ்சியுள்ள பாத்திரத்தை பிரியாணி சட்டியின் மேல் வைத்து கீழே பழைய தோசைக்கல்லை பிரியாணி பாத்திரம் அடியில் வைத்து 15நிமிடம் சிம்மில் தம் போடவும்.


அடுப்பை அணைக்கவும். மீண்டும் 15 நிமிடம் கழித்து திறந்து ஒரு போல் பிரட்டி சூடாக பரிமாறவும்.