www.womanofislam.com

Muslim women's online learning centre

மீன் குழம்பு


தேவையான பொருட்கள்:-


​சதை பற்றான மீன் - 6 - 8 துண்டுகள்

சின்ன வெங்காயம் - 5

பெரிய வெங்காயம் - பாதி

பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)

பூண்டு - 10 பல்

தக்காளி - ஒன்று

மிளகு தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

புளி - தேவைக்கு ஏற்ப

உப்பு - தேவைக்கு ஏற்ப

எண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க

கொத்தமல்லி – சிறிதளவு


​​செய்முறை:


மீனை நன்கு சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.


​​சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும்.


​​புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

பாதி பெரிய வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு 5 பல் பூண்டு, ஒரு தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.


நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் போது புளி கரைசல் ஊற்றி கொதிக்க விடவும்.


​நன்றாக கொதிக்கும் போது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள், சேர்த்து கொதிக்க வைக்கவும்.


​எண்ணெய் பிரிந்து வரும் போது சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்.


​பின்பு அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை போட்டு கொதிக்க வைக்கவும்.


​கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


​​சுவையான மீன் குழம்பு ரெடி.