www.womanofislam.com

Muslim women's online learning centre

கோழி கஞ்சி


தேவையான பொருட்கள்


பச்சை அரிசி - ஒரு கப்

கோழி துண்டுகள் - ஒரு கப்

வெங்காயம் - இரண்டு 

தக்காளி - இரண்டு

பச்சை மிளகாய் - இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்

உப்பு, எண்ணை

கிழங்கு, கரட் சிறிதாக நறுக்கியது ஒரு கப்

மிளகுதூள், சீரகத்தூள், மஞ்சத்தூள்

தேங்காய் பால் - ஒரு கப்

ரம்பை, பட்டை, கிராம்பு, ஏலம்.




செய்முறை


முதலில் பச்சை அரிசியை நல்ல ½ மணிநேரம் ஊறவைத்து ஒரு பாத்திரத்தில் ரம்பை இலை போட்டு நீர் விட்டு வேகவிடவும்.


அது வேகும் வரை நல்ல கழுவிய கோழியில் மிளகுதூள், சீரகத்தூள், உப்பு, மஞ்சத்தூள் விட்டு பிரட்டி வைக்கவும்.


சட்டியில் எண்ணை விட்டு பட்டை, கிராம்பு, ஏலம், வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் விட்டு வதக்கவும்.


நல்ல சிவக்க வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.


பின்பு கிழங்கு, கரட் போடவும். சிறிது நீர் விட்டு வேகவிடவும்.


கிழங்கு, கரட் அறைவேக்காடாக வெந்ததும் மசாலா கோழியை தட்டவும். சிறு தீயில் வேகவிடவும்.


கோழி நல்ல வெந்ததும் இறக்கி வைக்கவும்.


பின்பு அரிசி கஞ்சி போல் வெந்ததும் அதில் கோழியை கொட்டவும்.


தேங்காய் பாலை ஊற்றவும். உப்பு சரி பார்க்கவும். கொத்தமல்லி இலை புதினா போட்டு பிரட்டவும்.


வேறு ஒரு சட்டியில் சிறிது பட்டர் போட்டு சிறிது வெங்காயம் தாளித்து கஞ்சியின் மேலாக ஊற்றவும்.


மணக்க மணக்க கோழி கஞ்சி ரெடி