www.womanofislam.com

Muslim women's online learning centre

கறிவேப்பிலை சட்னி


தேவையான பொருட்கள்:-


​தக்காளி – 3

மிளகாய் வற்றல் – 6

சின்ன வெங்காயம் – 10

கறிவேப்பிலை - 8 கொத்து

வெள்ளை உளுத்தம் பருப்பு – 1 ½ தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

கடுகு - 1 ½ தேக்கரண்டி

கடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி





செய்முறை:


தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.


மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.


வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.


அதனுடன் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் அதில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றலை சேர்த்து வதக்கவும்.


அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கியதும் கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கி விட்டு ஆறவைக்கவும்.


பிறகு ஆறவைத்தப் பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுக்கவும்.


சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.