www.womanofislam.com

Muslim women's online learning centre

காய்கறி வடை


​​தேவையான பொருட்கள்:-

உளுந்தம்பருப்பு - 100 கிராம்

கடலை பருப்பு - 100 கிராம்

காய்கறிகள் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது

இஞ்சி - சிறிய துண்டு நறுக்கியது

மிளகாய் – 2 சீரகம் – சிறிதளவு

பெருங்காயம் – சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

எண்ணெய் - 1/2 லிட்டர்

உப்பு - தேவையான அளவு




செய்முறை:


உளுந்தம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.


இதனுடன் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி, பெருங்காயம், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.


(தேவைப்பட்டால் மிளகாய், இஞ்சியை அறைத்தும் சேர்க்கலாம்)


ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.


இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.