www.womanofislam.com

Muslim women's online learning centre

இனிப்பு மைதா பிஸ்கட்


தேவையான பொருட்கள்


பால் -1 கப்

சீனி -1கப்

நெய் -3/4கப்

கோதுமை மாவு -தேவையான அளவு

எண்ணெய்








செய்முறை


தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.


பால்-சீனி-நெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கவும்.


இதனுடன் மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.


மாவு தேவையான அளவு என்று சொன்னாலும், சரியான பக்குவத்தில் இருந்தால் 3 கிண்ணம் மாவு தேவைப்படும்.


பிசைந்தமாவை காற்றுப்புகாமல் அரைமணி நேரம் மூடிவைக்கவும்.


மிதமான சூட்டில் எண்ணெய் காயவைக்கவும். பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக்கி, தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும்.


கத்தி (அ) பிஸ்ஸா கட்டர் கொண்டு சிறு சதுரங்களாக நறுக்கவும்.


நறுக்கிய துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.