www.womanofislam.com

Muslim women's online learning centre

ஃப்ரைட் ரைஸ்


தேவையான பொருட்கள்:-


பாஸ்மதி அரிசி - 300 கிராம்

சிக்கன் - அரைகப்

இறால் (Shrimphs) - அரை கப்

நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப்

வெங்காயம் - 2

சோயா சாஸ் - 2டீஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு




செய்முறை:



அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்து ஃப்ரிட்ஜில் முன்பே வைத்து கொண்டால் ஃப்ரைட் ரைஸ் செய்யும் பொழுது உபயோகித்து கொள்ளலாம்.


சிறிய துண்டாக நறுக்கிய சிக்கனை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும், இறாலையும் சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடிகட்டவும்.


சிக்கன், இறால் இரண்டிலும் தலா அரைடீஸ்பூன் திக் சோயா சாஸ் அல்லது ஆயிஸ்டர் சாஸ் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தில் அடிப்பகுதியை நறுக்கி தாளிக்க பயன்படுத்தவும்.


மேற்பகுதியை அலங்கரிக்க பயன் படுத்தலாம்.


பின்பு ஊறிய சிக்கன், இறாலை சேர்க்கவும்.சிறிது உப்பு, பின்ச் சர்க்கரை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.


நறுக்கிய கேரட், கொடைமிளகாய், முட்டை கோஸ், பீஸ், கார்ன் கலந்து ஒரு கப் சேர்க்கவும்.


பிரட்டி விடவும்.சிறிது மூடி போடவும்,காய்கள், சிக்கன், இறால் வெந்து விடும்.


எல்லாம் வெந்தவுடன் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் சேர்க்கவும்.கலந்து விடவும்.


வடித்த சாதம் சேர்த்து பிரட்டி உப்பு சரி பார்த்து நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சிறிது மிளகுத்தூள் தூவி இறக்கவும்.