www.womanofislam.com

Muslim women's online learning centre

ஃப்ரைட் கோழி பிரியாணி


தேவையான பொருட்கள்:-


கோழிக்கறி - முக்கால் கிலோ, பாசுமதி அரிசி - 600 கிராம், வெங்காயம் - 200 கிராம்,

தக்காளி - 200 கிராம், மசாலா - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா - முக்கால் ஸ்பூன்

(ஏலம் பட்டை கிராம்புத்தூள்), மல்லி புதினா- தலா ஒரு கைபிடியளவு,

எண்ணெய் - 150 மில்லி, நெய் - 50 மில்லி, எலுமிச்சை – 1,

தயிர் – 1 டேபிள்ஸ்பூன், லெமன் யெல்லோ கலர் – பின்ச்,

உப்பு – தேவைக்கு….






செய்முறை:


கழுவிய கோழியுடன்  உப்பு, தயிர், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் , சிக்கன் டிக்கா அல்லது சிக்கன் 65 மசாலா 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து சிக்கனை ஊறவைக்கவும்.  நறுக்கவேண்டியவற்றை நறுக்கி வைக்கவும்.


கடாயில் 4 டேபிஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறிய கோழியை பொரித்து எண்ணையோடு வைக்கவும்.


பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் கலவை விட்டு காய்ந்ததும் வெங்காயம் முழுவதும் போட்டு வதக்கி, சிவந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி புதினா, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.


பின்பு தக்காளி ,உப்பு சேர்த்து சிறிது மசிந்ததும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். பிரட்டி சிம்மில் வைக்கவும். எண்ணெய் தெளிந்து மேலே வரும்.


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிவந்ததும் ஊறிய அரிசி போட்டு முக்கால் பதத்தில் வெந்து வடித்து வைக்கவும்.


ரெடியான ஃப்ரைட் சிக்கனை பிரியாணி மசாலாவில் சேர்க்கவும். லெமனை பிழியவும், தேவைப்பாட்டால் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். கோழியை  சேர்த்த பின்பு , வடித்த சாதம் சேர்த்து சஃப்ரான் அல்லது லெமன் கலர் கரைத்து ஊற்றவும் .


அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி, அடுப்பை சிம்மில் 20 நிமிடம் வைக்கவும். அடியில் பழைய தோசைக்கல் வைக்கவும்.  திறந்து ஒரு போல் பிரட்டி விடவும். சுவையான ஃப்ரைட் கோழி பிரியாணி ரெடி.


பிரியாணி தம் ஆனவுடன் ஒரு போல் நன்கு பிரட்டி அடியில் உள்ள சிக்கன், பிரியாணி மசாலாவும் கலந்த பின்பு பரிமாறவும்.


தயிர் சட்னியுடன் சூடாக பரிமாற சூப்பராக இருக்கும்.