www.womanofislam.com

Muslim women's online learning centre

எக் பிரெட் உப்புமா



​​​தேவையான பொருட்கள்:-


பிரெட் - 6

முட்டை - 2

வெங்காயம் - 1

கடுகு – 1 ஸ்பூன்

உளுந்து – 1 ஸ்பூன்

கொத்த மல்லி

கறிவேப்பிலை

பச்சை மிளகாய் – 3

உப்பு

எண்ணெய் – தேவைக்கு


செய்முறை:


பிரெட்டை உதிர்த்து வைக்கவும், முட்டையுடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும்.


வெங்காயம், பச்சை மிளகாயினை பொடியாக அறிந்து வைக்கவும்.


கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்த மல்லி போட்டு தாளித்து வதக்கவும்.


உதிர்த்த பிரெட்டை போட்டு கிண்டவும். சிறிது வதங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக முட்டையினை ஊற்றி கிண்டவும்.


முட்டை பிரெட்டுடன் கலந்த பின் இறக்கவும். சூடாக பரிமாறவும்.