www.womanofislam.com

Muslim women's online learning centre

பாதுஷா


தேவையான பொருட்கள்


மைதா மாவு / ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 11/4 கப்

பேக்கிங் சோடா - 1/4ஸ்பூன்

வெண்ணை - 115 கிராம்

சர்க்கரை - 1 1/2கப்

தண்ணீர் - 1/4 கப்

கேசரி பவுடர் - 1/4 ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.






செய்முறை


மைதாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும்.


வெண்ணையை உருக்கிக்கொண்டு அதனுடன் சலித்த மாவை சிறிதுசிறிதாக சேர்த்துக்

கலக்கவும்.


பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசைந்து கொள்ளவும். [குறைந்தது 15 நிமிடம]


சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு ஒண்ணரை கப் தண்ணீர் சேர்த்து பாகுகாய்ச்சவும். பாகு கொதி வர ஆரம்பித்த பின் ஏழு நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.


பிசைந்த மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு,ஓரொரு உருண்டையையும் உள்ளங்கைகளின் நடுவே வைத்து அழுத்தி பாதுஷா வடிவம் கொண்டு வரவும்.


மிதமான சூட்டில் எண்ணெயை காயவைக்கவும். சிறிதளவு மாவை எண்ணெயில் போட்டால் சிறிது நேரம் கழித்துத்தான் அது மேலே வரவேண்டும். அதுதான் சரியான பதம். அப்பொழுது எண்ணெய்ப்பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, பாதுஷாக்களை ஒன்றொன்றாக எண்ணெயில் போடவும்.


சிறிது நேரத்தில் அவை எண்ணெயில் மிதக்க ஆரம்பித்ததும் எண்ணெய்ப் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.


பாதுஷாக்கள் பொன்னிறமானதும் எடுக்கவும். [ சுமார் 15-17 நிமிடங்கள்ஆகும்.]


பொரித்த பாதுஷாக்களை மிதமான சூட்டில் உள்ள பாகில் போட்டு பத்துநிமிடங்கள் ஊற விடவும். ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும்.


2 ஸ்பூன் சர்க்கரையை ஒரு ஸிப்லாக் கவரில் எடுத்து, அதனுடன் ஒருதுளி மஞ்சள், ஒரு துளி சிவப்பு நிறங்களை சேர்க்கவும். ஸிப்லாக்கவரை லாக் செய்துகொண்டு வண்ணங்கள் சர்க்கரையுடன் சேரும்படி கலக்கவும்.


சர்க்கரைப்பாகு மீதமிருந்தால் பாதுஷாக்களின் மீது ஊற்றி விட்டு,கலர்ப்பொடி கலந்த சர்க்கரையை மேலே தூவி அலங்கரிக்கவும்.