www.womanofislam.com

Muslim women's online learning centre

பெங்களூர் பிரியாணி


தேவையான பொருட்கள்:-


கோழி – 1 கிலோ

அரிசி – 1 கிலோ

எண்ணை – 100 கிராம்

நெய் – 150 கிராம்

பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு

வெங்காயம் – 500 கிராம்

தக்காளி - 500 கிராம்

இஞ்சி – 1 ½ ஸ்பூன்

பூண்டு – 1 ½ ஸ்பூன்

கொத்தமல்லி தழை - 1 கப்

புதினா – 1 ½ கப்

பச்சை மிள்காய் – 5

தயிர் – 1 கப்

சிகப்பு மிளகாய் தூள் – 1 ½ டீஸ்பூன்

மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்

தணியா பொடி - 1 டீஸ்பூன்

கலர் பொடி – 1 சிட்டிகை

எலுமிச்சை பழம் – 1

நெய் – ஒரு டீஸ்பூன்


செய்முறை:


ஓர் பெரிய சட்டியில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். அதனை தனியாக எடுத்து வைக்கவும்.

பின் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் இஞ்சி, பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும். பிறகு பாதி கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்.

பச்சை மிளகாய், மிளகாய்தூள், மஞ்சல்தூள், உப்பு தேவையான அளவு போட்டு வதங்கியவுடன் கோழி, தயிர், தனியா பொடி, ½ மூடி எலுமிச்சை சாறு, தக்காளி, மீதி கொத்தமல்லி, புதினா போட்டு வேக விடவும்.

கோழி நன்கு வெந்ததும் எண்ணைய் மேல் வரும்போது 1 கப் அரிசிக்கு 1 ½ கப் சூடு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்.

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்கு வடி கட்டவும்.

அரிசியை போட்டு நன்கு கிளறவும்.

அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால் பகுதி வெந்தவுடன் தீயை சுருக்கவும்.


பாதி எலுமிச்சை ஜூஸ் ஊற்றவும்.

சட்டியை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும்.

10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி.