www.womanofislam.com

Muslim women's online learning centre


அழகான முகத்தை பெற வேண்டுமா?


முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.


சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.


சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.


முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.


புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.


ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.


பழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.


ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.


கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.


இரண்டு சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில் தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்.


சோற்றுகற்றாலை இதன் உள்ள இருக்கும் கோதலை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு கிண்ணத்தில் இருக்கும் அந்த கோதலுடன் கொன்சம் நீர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக ஒரு வாரத்தில் மாறிவிடும்.


உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.


உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள்.


முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.


ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.


வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.


இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.


பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் , பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.


வெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.


ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.


சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.


புதினாசாறு - 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி - 1 டீஸ்பூன், சந்தனம் - கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.


உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.


ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.


ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் பருக்கலாம் ஏற்பட்ட வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.


பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.


வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக். ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.


ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.


மூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் ‘மாஸ்க்’ போல போடவும். நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும்.


ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.


இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.


முகத்தில் கருமை படர்ந்தால் நனாரி வேர், ஆவாரம்பூ, ஆலம்பட்டை மூன்றையும் இடித்து கஷாயம் செய்து தினசரி காலை, மாலை குடித்து வந்தால் முகத்தில் படர்ந்த கருமை நிறம் மாறும். 








கண்ணுக்குக் கீழே கருவளையம் நீங்க என்ன செய்வது ?


சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்புவளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை அதில் நனைத்து கண்ணின் மீது வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


கண்ணுக்குக் கீழே கருவளையம் உள்ளதா? 2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரையுங்கள். இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து அலசுங்கள். கருவளையம் நீங்கி விடும்.


கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.


சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும். 


வெள்ளரிகாய், உருளைகிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 


கருவளையம் வராமல் தடுக்க, குறைந்தது 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். தூங்கும் போது எந்த விதமான மன உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை போக்கும். 


வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்து, பஞ்சில் நனைத்துக் குளிர வைத்து, கண்களின் மேல் வைத்துக் கொண்டு, இருட்டான அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். அடிக்கடி இப்படிச் செய்துவர, கருவளையங்கள் காணாமல் போகும். 


பாதாம் பருப்பை ஊறவைத்து பால் விட்டு அரைத்து அந்த விழுதை கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் மறையும். 


கண் வசீகரத்திற்கும், உடல் அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் ஏற்றது. தூக்கமின்மையை போக்கி கண்களை புத்துணர்ச்சியாக்கும் தன்மை ஆரஞ்சுக்கு உண்டு. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃப்ரீசரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆன உடன் அதை மெல்லிய துணியில் கட்டி வைத்து, கண்ணுக்கு மேல் ஒற்றி எடுக்கவேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும். 


கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும் காணாமல் போகும்.

முகத்தில் வளரும் தேவையற்ற முடி நீங்க வழி என்ன?


முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.


பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும். 


கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.


முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும். 


கடினமாக இருக்கும் தேனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், முகத்தில் வளரும் முடிகளை தடுக்கலாம். வேண்டுமெனில், தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து செய்யலாம். 


சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால், அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும். 


ஒரு டீஸ்பூன் சோள மாவில், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் தடவி, உலர விட்டு கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, இறந்த செல்களும் வெளியேறிவிடும். 


அக்காலத்தில் மக்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பதனால் தான், அவர்களது சருமத்தில் முடிகளின்றி, சருமம் பட்டுப்போன்று இருந்தது. எனவே தினமும் இதனை தடவி குளித்து வந்தால், முடிகளின் வளர்ச்சி குறைவதோடு, முடிகளும் நீங்கிவிடும். 


பிரட்டை பாலில் ஊற வைத்து, அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள முடி நீங்குவதோடு, முகம் பொலிவோடு இருக்கும்.

சுருக்கமில்லாத முகம் பெற வழி என்ன?


நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கம் மாறும்.


வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸோ (Orange Juice) , கேரட் ஜூஸோ (Carrot Juice) குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.


வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை தாராளமா சாப்பிடுங்க. 


கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘ஏ’ இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.


சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.


சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும்.


பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.


அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும்.


பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.


எலுமிச்சம்பழத் தோலை காய வைத்து பொடித்து பன்னீரில் கலந்து தயிர், முள்ளங்கி சாறும் கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம் பளபளப்பாகும். தேய்த்து வந்தால்

முகத்தில் உள்ள சுருக்கம் மறையும்.


தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.


முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.


சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டால், தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முகத்தில் எண்ணை வழிக்கிறதா?


தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.


உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால், பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.


எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். எண்ணை பசை குறைந்து புத்துணர்ச்சி அளிக்கும்.


வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.


வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.


அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். 


எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம். 


பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. 


தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவுபெறும். 


உருளைகிழங்கையும் பச்சையாக அரைத்து முகத்தில் பூசினாலும் எண்ணெய் பசை மாறி முகம் பொலிவாக இருக்கும்.


படுக்கும் போது சந்தனத்தைக் குழைத்து முகத்தில் தடவிக் காலையில் எழுந்திருக்கும் போது பன்னீரால் முகத்தைக் கழுவவும். எண்ணெய் பசையுள்ள முகம் பளபளப்புடன் இருக்கும். 


முகத்தில் எண்ணெய் வடிவதைப் போக்க, ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் வைத்துக் கட்டி, முகத்தில் காலை, மாலை ஒற்றி வந்தால் எண்ணெய் வடிவது மாறி விடும். 


வேப்ப இலை, புதினா இலை, மஞ்சள் மூன்றையும் வைத்து நன்றாக மை போல் அரைத்து முகம் முழுவதும் பத்துப்போல சீராகப் போட வேண்டும். தினமும் இரவில் படுக்கப் போகும் போது கிளிசரின் தடவிக் கொண்டால், எண்ணெய்ப் பசை நீங்கி முகம் மிருதுவாகும். 


தக்காளி, பப்பாளிச் சாறெடுத்து தினமும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.


எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். 


எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.


எண்ணெய் பசை சருமம் உள்ள வர்கள், மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.


வறண்ட சருமம் பொலிவாக மாறுமா?


தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.


உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.


மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். 


அதிக வருண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள்
(உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள்ளவும், ஆலீவ் ஆயீல், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும். 



வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும். இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். 


வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. தினமும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை என மூன்று வேளையும் ஏதாவது ஒரு பருப்பை ஒரு வேளைக்கு இரண்டு என சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சினைகள் தீரும். கீரை வகைகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


உதடுகள் அழகாக சிவப்பாக வேண்டுமா?


எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உதட்டில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவவும். தினமும் இப்படி செய்து வாருங்கள். கருமை மறைந்து உதடு பளிச்சிடும்.  


தினமும் யோகர்ட்டை உதட்டில் தடவி வாருங்கள். யோகார்ட் இல்லையென்றால் தயிர் தடவலாம். வேகமாக கருமையை மறையச் செய்யும். 


ரோஸ் வாட்டரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி இரவில் படுக்கச் செல்லுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருமை மறைந்து சிவப்பாகும். 


உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.


பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.


வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.


குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமபூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். 


மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.

அழகான  பொலிவான சருமமாக மாற்ற வழிகள்?


பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.


மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதனை சருமத்தில் தினமும் தடவி ஊற வந்தால், அது சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதுடன், மற்ற சரும பிரச்சனைகளையும் போக்கிவிடும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.


மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.


ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்.


குளிப்பதற்கு முன் ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு 'லெமன் பாத்' எடுங்கள் இதன் புத்துணர்வையும் சரும மினுமினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.


இரவு படுக்கப் போகும் முன் பசும்பாலில், தென், மஞ்சள் பொடி, குங்குமபூ,சேர்த்து சாப்பிட்டு வரவும். உடலில் மினுமினுப்பு தோன்றும்.


கொதிக்கும் நீரில் 3 க்ரீன் டீ பேக்குகளை போட்டு, சிறிது இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி, சருமத்தில் தடவினால் முகப்பருக்கள் நீங்கிவிடும். வேண்டுமெனில் இத்துடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்தும் சருமத்திற்கு போடலாம். இதனால் சருமத்தில் உள்ள பழுப்பு நிறம் மற்றும் தழும்புகள் மறையும்.

இஸ்லாமிய மருத்துவம்


நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை நம் அழகு மெருகேற பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை அழுத்துங்கள்.


அல்குர்ஆனில் இறைவனால் கூறப்பட்ட மருத்துவம் மற்றும் நபிகம் நாயகம் ﷺ அன்னவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ குறிப்புகள்

தமிழ் பகுதி → அழகு குறிப்புகள் முக அழகு குறிப்புகள்