www.womanofislam.com

Muslim women's online learning centre

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஒழுக்கம் - தொடர் 2


♣ பிறர் வீட்டில் உணவருந்தச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை


​1. உத்தரவு கேட்டு ஸலாம் கூறி உள்ளே நுழையவேண்டும்.


2. அழைக்கப்பட்டவர்கள் மாத்திரம் செல்லவேண்டும்.


3. நேரத்திற்கு செல்ல வேண்டும். அதாவது, மிக சீக்கிரமாகவும் இல்லாமல் மிக தாமதமாகவும் இல்லாமல் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும்.


4. வசதி இருந்தால் ஏதேனும் அன்பளிப்பு வாங்கி கொடுத்தல்.


5. தொடர் 1 இல் கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைப் பேணி உண்ணவேண்டும்.


6. குறையேதும் கூறக்கூடாது. உதாரணமாக உப்பை கூடக் கேட்கக் கூடாது.


7. தேவையான அளவை மட்டும் போட்டு உண்ண வேண்டும். அவர்கள் வைத்த எல்லாவற்றையும் உண்ணாமல் சிறிது வைத்து உண்ண வேண்டும்.


8. விருந்துண்ட பின் அவர்களிடம் “ஜஸாகல்லாஹு கைரன்” என்று நன்றி தெரிவிக்க வேண்டும்.


9. பின்னர் அவர்களுக்காக பின்வரும் துஆவை ஓத வேண்டும்:


அல்லாஹும்ம பாரிக் லனா fபீஹி வ அத்இம்னா கைரன் மின்ஹு.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: அபூதாவுத்



10. அடுத்தவர்களின் வீட்டில் நோன்பு திறந்தபின்


அfப்தர இந்தகுமுஸ் ஸாஹிமூன வ அகல தொஆமகுமுல் அப்ராறு வஸல்லத் அலைகுமுல் மலாஇகது


அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: அபூதாவுத்



11. விருந்து முடிந்த பின்னர் தாமதிக்காமல் அவ்விடத்தை விட்டுச் செல்லுதல் நல்லது.




♣ வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் முறை


1. விருந்தாளிகளை புன்னகையோடு எழுந்து நின்று வரவேற்க வேண்டும்.


2. ஆண்கள் ஆண் விருந்தாளிகளுக்கும், பெண்கள் பெண் விருந்தாளிகளுக்கும் ஸலாம் கொடுத்து முஸாபா செய்து (கட்டி அணைத்து) வரவேற்றல் நலம்.


3. எதிரியாக இருந்தாலும் நல்ல எண்ணத்தோடு வீடு தேடி வந்தால் மன்னித்து அவர்களை நல்ல முறையில் வரவேற்க வேண்டும்.


4. பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது அந்நிய ஆண்கள் (அதாவது மார்க்க சட்டப்படி திருமணம் செய்ய ஆகுமான அந்நிய ஆண்கள்) வந்தால் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்று மிக பணிவாக சொல்லி அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.


5. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை திருப்தியாக உபசரிக்க வேண்டும்.


6. அவர்களுக்கு உண்ண, பருக ஏதேனும் கொடுத்தல் வேண்டும்.


7. அவர்களோடு நல்ல முறையில் பேசுதல். வீண் பேச்சுகள், மற்றவர்களை பற்றிய  புறம் பேச்சு போன்றவற்றை தவிர்த்தல்.


8. இறுதியாக வாசல் வரை சென்று வழியனுப்புதல்.