www.womanofislam.com

Muslim women's online learning centre

இஸ்லாத்தில் நடைமுறைபடுத்தப்படும் சகோதரத்துவம்! 


எவ்வாறு மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவத்தைப் பேணுவது? எனும் கேள்விக்கு நடைமுறை வாழ்க்கையில் கொடுத்த, கண்ட மார்க்கம் இஸ்லாம். அதாவது அல்லாஹ்வை மட்டுமே வழிப்படும், அனைத்து முஸ்லிம்களும் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைகள் தொழுவது கட்டாயக் கடமையாகும்.



இவ் ஐந்து வேளைத் தொழுகைகளும் ஊர்களிலுள்ள எல்லாப் பள்ளிவாசல்களிலும் கூட்டாகத் தொழுவிக்கப்படும். பள்ளிவாசல்களில் கறுப்பர், வெள்ளையர், பணக்காரர், ஏழை மற்றும் வேறு நாட்டவர், வேறு மொழி பேசுபவர், அரசியல்வாதி, பட்டதாரி, கூலித் தொழிலாளி என்ற எந்தவித வேறுபாடுமின்றி தோளோடு தோள் சேர்த்து நின்று தொழுகைகள் நிறைவேற்றப்படுகின்றன.



அதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஊர்களிலுள்ள பிரதான பள்ளிவாயில்களில் மட்டும் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்படும். இதில் அந்த ஊரிலுள்ள ஏராளமான முஸ்லிம் மக்கள் கூட்டாக கலந்து கொள்வார்கள்.



இதைவிட அதிகமான பெருந்திரளான மக்கள் ஒரு பெருந்திடலில் வருடத்திற்கு இருமுறை அதாவது ஹஜ் மற்றும் நோன்புப் பெருநாட்களில் ஒன்றுகூடி தோளோடு தோள் நின்று இறைவனை வணங்கி முஸாபஹா எனும் நலம் விசாரித்து தமது சகோதரத்துவத்தை வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களின் மூலம் நிரூபிக்கின்றனர்.


முடிவாக ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் வழிபாட்டின் மூலம் புனித மக்கமா நகரிலே நிற, மொழி என்ற அந்த வேறுபாடுமின்றி எல்லா நாட்டு மக்களும் தமக்கிடையேயான சகோதரத்துவத்தை பறைசாற்றுகின்றனர். இங்கு எல்லா மக்களும் தமக்கிடையே ஸலாம் கூறிக் கொள்வதன் மூலம் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.


எனவே யார் இந்தத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றத் தவறுகிறார்களோ அவர்கள் இஸ்லாம் எனும் குடும்பத்திலிருந்து தூரவிலகுகிறார்கள். எந்த தடங்கள் இருந்தாலும் ஐந்து நேரத் தொழுகைகளை தவறாது கூட்டாகத் தொழுவதன் மூலம் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வோம்.