www.womanofislam.com

Muslim women's online learning centre

இஸ்லாமியப் பெண்களே திருந்துங்கள்! 


கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னதாக, அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இரண்டு கூட்டத்தினர்களை நரகவாதிகள் எண்டு கூறினார்கள். அந்தக் கூட்டத்தினரை தற்போது அதாவது, என்னுடைய காலத்தில் நான் காணவில்லை. அவர்கள் எனது மரணத்திற்குப் பின்னால்தான் தோன்றுவார்கள். அவ்விரு கூட்டத்தினரில், முதலாவது கூட்டத்தினர் யாரென்றால், அவர்கள் மாடுகளின் வால்களைப் போல் அவர்களிடம் சாட்டைகளிருக்கும். அந்த சாட்டையினால் மனிதர்களை எவ்வித உரிமைகளுமின்றி அடித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி ஏவிக் கொண்டிருப்பார்கள்.



இரண்டாவது கூட்டத்தினர், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், வாலிபர்களை வழிகேட்டில் இழுத்துச் செல்லக்கூடிய பெண்கள்! அப்பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் அவர்கள் எவ்வாறான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்! என்று இஸ்லாம் கூறுகின்றதோ, அவ்வாறு அணியாமல் தன் இஷ்டப்பிரகாரம் அணிந்து செல்வார்கள்.


ஆனால் இவ்வாறான பெண்களைப் பற்றி கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறும்போது பின்வருமாறு கூறுகின்றார்கள். இப்பெண்கள் ஆடை அணிந்தும், ஆடை அணியாதவர்களைப் போன்று (நிர்வாணமாக) பாதையில் சென்று கொண்டிருப்பார்கள். இப்பெண்கள் ஆண்களின் உள்ளங்களை அப்பெண்கள் பக்கம் கவர்ச்சியாக்குவதற்காகவும், அந்த ஆண்கள் இவர்களை விரும்பவேண்டும் என்பதற்காகவும் தான் இவ்வாறு அணிந்து கொள்வார்கள். இப்பெண்களின் தலை முடிகள் தலைவிரிகோலமாக ஒட்டகச்சிவிங்கியின் திமிலைப் போல் அங்குமிங்குமாக ஆடிக்கொண்டிருக்கும். இப்பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், நாங்கள் தான் நல்லவர்கள் என்று! ஆனால், இவ்வாறான பெண்கள் சுவர்க்கத்தில் ஒருபோதும் நுழையவும் மாட்டார்கள். ஏனென்றால், சுவர்க்கத்தின் வாடை மேற்கூறிய இவ்விரு கூட்டத்தினரை விட்டும் ஒரு மனிதன் 100 – வருடங்கள் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அடித்துக் கொண்டிருக்கும். (முஸ்லிம்)



மேற்கூறப்பட்ட ஹதீஸில், ஆடைகள் அணிந்தும் ஆடையற்றவர்களாக (நிர்வாணிகள் போன்று) பெண்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள். எவ்வாறென்றால், அப்பெண்கள் உடம்பின் சிலதை மறைத்து அவர்களுடைய அழகையும் அந்தஸ்தையும் அந்நியர்களுக்குக் காட்டுவதற்காக வேண்டி (உடம்பின்) சிலதை திறந்திருப்பார்கள். அந்த ஆடையின் மூலம் அவர்களின் உடம்புகள் தெரிந்து கொண்டிருக்கும். இவர்கள் ஆடைகள் அணிந்திருந்தாலும் கூட அணியாதவர்களிப் போன்றவர்கள். இவ்வாறு ஆடை அணிபவர்களை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கண்டித்திருக்கிறார்கள், வெறுத்திருக்கிறார்கள், நரகம் புகுவார்கள் என எச்சரித்துள்ளார்கள். அறிஞர்கள் சொல்கிறார்கள்; பெண்கள் மென்மையான ஆடைகளை அணிந்திருப்பார்கள், அவர்களுக்குப் பின்னால் நிற்கக்கூடியவர்களுக்கு அப்பெண்களின் உடம்பு தென்படும். இவர்களும் ஆடை அணிந்திருந்தும் ஆடையில்லாதவர்களைப் (நிர்வாணிகளைப்) போன்றவர்கள். அதேபோல் பெண்கள் தோழோடு ஒட்டிய வண்ணம் இறுக்கமான ஆடைகளை அணிந்த நிலைமையில் நடமாடிக் கொண்டிருப்பர். இவர்களும் ஆடை அணிந்தும் ஆடை இல்லாதவர்களைப் போன்றவர்கள்.



இன்றைய இஸ்லாமியப் பெண்களை எடுத்துக் கொண்டால் ஆண்கள் உடுப்பதைப் போன்று அவர்களும் (காற்சட்டை சேர்ட் போன்றவற்றை) உடுத்துக் கொண்டு திரிகின்றனர். ஆனால், இஸ்லாம் இவ்வாறு பெண்கள் ஆண்களுக்கு ஒப்பாக ஆடை அணிவதை ஹராமாக்கியிருக்கிறது. இவ்வாறாக எமது பெண்கள் இருந்தால் அவளைத் தடுப்பது வலிகாரனான தந்தைக்கு அல்லது கணவனுக்குக் கட்டாயமாகும். ஏனெனில், அணிபவர்களை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்.
அனைவரும் பொறுப்பாளிகள்! அவர்களின் பொருப்பைப் பற்றி கியாமத் நாளில் கேட்கப்படுவார்கள். (அவர்களின் பொறுப்பை அல்லாஹ் கேட்பான்)



இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்துகிறது. ஆனால், இன்றைய (நவீன) இஸ்லாமியப் பெண்கள் அதை உணருவதில்லை. அவர்களுக்கு ஆண்களைப் போன்று சுதந்திரம் வேண்டும்! என்று மேடையில் ஏறிவாதிடும் அளவிற்கு வந்துவிட்டார்கள். அவர்கள் ஒன்றைப் புரியவில்லை என்று நினைக்கிறேன். இவ்வாறு வாதிடுபவர்கள் இஸ்லாமியப் பெண்களாகக் கருதப்படமாட்டார்கள். பெண்கள் இஸ்லாத்தின் கண்கள். ஆகையால், இஸ்லாம் கூறும் முறைப்படி நாம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இல்லையானால் அல்லாஹ்வின் கோபத்திற்கும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் சாபத்திற்கும் ஆளானவர்களாக நாம் மாறிவிடுவோம்.



ஒரு மனைவி தன் கணவனின் விருப்பமின்றி வீட்டைவிட்டு வெளியேறிச் செல்வாளேயானால் அவள் விபச்சாரி என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கண்டித்துள்ளார்கள். பெண்கள் கண்ணியத்தோடு வாழ வேண்டியவர்கள்!  ஆக, இஸ்லாம் வலியுறுத்துகின்ற பர்தா – ஹிஜாப் போன்ற முறைகளை கையாண்டு  வாழ நாம் முயற்சிப்போமாக! அதற்கு வல்ல நாயன் அருள் புரிவானாக!

. 

.