www.womanofislam.com

Muslim women's online learning centre

இஸ்லாத்தின் அடிப்படைகள்


ஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அடிப்படை காரணி இறை நம்பிக்கையாகும். ஒருவர் அல்லாஹ்வை இறைவனாகவும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை இறைத்தூதராகவும் உள்ளத்தால் ஒருவர் நம்பிக்கை கொண்டு ஏற்கும் போது அவர் முஸ்லிமாக மாறுகிறார்.


அதன்படி இஸ்லாத்தின் அடிப்படை இறை நம்பிகையாகும். அதாவது

"லாயிலாஹா இல்லல்லாஹா முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்"


"வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் திருத்தூதராகும்". என்று நம்பிக்கை கொள்வதாகும்.


எனவே இதன் படி ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஒரே இறைவன் என்று நம்பி அவனை மட்டுமே வணங்க வேண்டும். மேலும் ​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை இறைத்தூதராக ஏற்று அன்னவர்களை பின்பற்றி நடக்க வேண்டும்.


அல்லாஹ்வையும், ​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும் தன் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரையும் விட நேசிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.